ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“நோய் வயது அறியாது“- மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் இளையோரும் பங்கேற்க வலியுறுத்து

அம்பாங், ஜூன் 12- வயது வரம்பு பாராது நோய்கள் அனைவரையும் தாக்கும் என்பதால் மாநில அரசின் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு இளையோர்  கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

இதன் அடிப்படையில் உடலாரோக்கியத்தில் அக்கறை கொண்ட பல இளைஞர்கள் இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டுகின்றனர்.

தாம் இதுவரை எந்த நோயினாலும் பீடிக்கப்படாத போதிலும் உடல் நிலை குறித்து அறிந்து  கொள்வதற்காக சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் தாம் பங்கேற்றதாக ஃபாத்தின் நஸ்லிஹா முகமது நஸ்ரி (வயது 27) கூறினார்.

நோய் வயது அறியாது எனக் கூறிய அவர், டிவிட்டர் மூலம் இந்த பரிசோதனைத் திட்டம் குறித்து ஒரு மாதத்திற்கு முன்னர் அறிந்து அதில் பதிந்து கொண்டதாக சொன்னார்.

இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டம் மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளதாக தனபாலன் தங்கையா (வயது 41) கூறினார்.  குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் பயன் பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டம் ஆண்டுக்கு குறைந்தது மூன்று முறையாவது நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பலர் வேலையிழந்து பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இது போன்ற இலவச மருத்துவ பரிசோதனைகள் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.

இதனிடையே, கடந்த 25 ஆண்டுகளாக தமக்கு நீரிழிவு நோய் இருந்த போதிலும் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு முறைகூட முறையான மருத்துவப் பரிசோதனையை தாம் மேற்கொள்ளவில்லை என்று ஃபூ குவான் தியங் (வயது 68) என்பவர் கூறினார்.

மாநில அரசின் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்பதற்கு  தன் மனைவியுடன் தாம் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :