ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று கடந்த வாரம் 0.4 விழுக்காடு உயர்வு- 25 மரணங்கள் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 13- இம்மாதம் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான 23வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் புதிய கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு அதிகரித்து 11,096 ஆக ஆனது. 22வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 11,052 ஆக இருந்தது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நாட்டில் 23வது நோய்த் தொற்று வாரத்தில் தீவிரமாக இருந்த நோய்த் தொற்று சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 22,013 ஆக அல்லது 5.5 விழுக்காடாக இருந்தது என்று அவர் சொன்னார்.

மேலும் 23 வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21.7 விழுக்காடு குறைந்து 10,806 ஆக ஆனது. 22வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 13,797 ஆக இருந்தது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 66 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

இருபத்து மூன்றாவது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 சம்பந்தப்பட்ட மரண எண்ணிக்கையும் 3.8 விழுக்காடு 25 பேராக ஆனது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்நோயினால் 26 பேர் பலியாகினர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35,711 ஆக ஆகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்நோய் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் பி.கே.ஆர்.சி. மையங்களில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சம் பேருக்கு 10 விழுக்காடு என்ற அடிப்படையில் வீழ்ச்சி கண்டுள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :