ECONOMYSELANGOR

பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர் மாநில அரசின் மக்கள் நலன் செயல்களை எடுத்துரைத்தார்

கோலா சிலாங்கூர், ஜூன்13: சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் மக்களின் சுமையை குறைக்க மாநில அரசின் சலுகைகள் மற்றும் மக்கள் நலன் செயல்களை எடுத்துரைத்தார் பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர்.

இலவச ஆய்வுகள் மட்டுமின்றி, இலவச குடிநீர் திட்டம், மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்திற்கான (SMUE) ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் போன்ற மக்களின் சுமையை குறைக்கும் பல்வேறு திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்று ரோசானா ஜைனல் ஆபிடின் கூறினார்.

“மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி  மாநில அரசின்  பல்வேறு திட்டங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கை குடியிருப்பாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரிபார்க்க ஊக்குவிக்கிறது.

“அதே நேரத்தில், நாங்கள் அதிர்ஷ்ட குலுக்கல் ஒன்றையும் ஏற்பாடு செய்து, முதல் 50 பங்கேற்பாளர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினோம். இதன் விளைவாக, ஒரு மணி நேரத்தில், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பரிசோதிக்கப்  பட்டுள்ளனர், இதுவே எங்கள் குறிக்கோள், ”என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.


Pengarang :