ECONOMYHEALTH

மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் டிங்கி அதிகரிப்பு- பெ.ஜெயா துணை டத்தோ பண்டார் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூன் 14- மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் டிங்கி சம்பவங்கள் அதிகம் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது.

டிங்கி சம்பவங்கள் அதிகம் பரவும் இடங்களாக டேசா மெந்தாரி, டாமன்சாரா டாமாய், ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புக்கிட் லஞ்சான் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார் ஷரிபா மர்ஹாய்னி சைட் அலி கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு வட்டார மக்களுக்கு டிங்கிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அமலாக்க நடவடிக்கையை வலுப்படுத்துவது ஆகிய இரு அணுகுமுறைகளை மாநகர் மன்றம் அமல்படுத்தவுள்ளது என்று அவர் சொன்னார்.

டிங்கி அபாயம் மீதான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. ஆகவே இவ்விவகாரத்தில் ஜே.எம்.பி. எனப்படும் கூட்டு நிர்வாக மன்றங்கள் மற்றும் கட்டிட ஆணைய இலகாவுடன் நாங்கள் ஒத்துழைப்பை நல்கவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், சமூக வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தாங்கள் அதிகரிக்கவுள்ளதோடு சட்ட அமலாக்கத்தையும் வலுப்படுத்தவுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :