ECONOMYNATIONAL

கோழி அடிப்படையிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய அரசு சிறப்பு அனுமதி வழங்கியது

புத்ராஜெயா, ஜூன் 16: கோழி சார்ந்த சில பொருட்களை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு சிறப்பு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக வேளாண் மற்றும் உணவுத் தொழில் அமைச்சகம் (மாஃபி) இன்று அறிவித்துள்ளது.

மாஃபி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமக் கோழிகள் மற்றும் கருப்பு கோழிகள் உள்ளிட்ட வண்ணக் கோழி, அனைத்து கோழி அடிப்படையிலான தயாரிப்புகள், மற்றும் வளர்ப்பு கோழிகளுக்கான ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள் (DOC) ஆகியவைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசியாவில் உணவுப் கையிருப்பு போதுமானதாக இருக்க, கோழி இறைச்சி சார்ந்த உற்பத்தியை உறுதி செய்வதற்காக, கோழி ஏற்றுமதி, உயிருள்ள கோழிகள், வட்டக் கோழி, துண்டாடப்பட்ட கோழி மற்றும் கோழி சார்ந்த உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதிக்கு  ஜூன் 1, 2022 முதல் நிறுத்தப்பட்டன.

மாஃபி இன் கூற்றுப்படி, ஜூன் 1 முதல் கோழி ஏற்றுமதியை தடை செய்வது தொடர்பாக கால்நடை வளர்ப்பு தொழில் துறையினர் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் சங்கங்களுடன் விரிவான பேச்சு நடத்திய பின்னர் சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

“வெளியேறும் அனைத்து வழிகளிலும், மாக்கிஸ் அமலாக்க அதிகாரிகள் (மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை) தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதோடு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படவில்லை.

“பொருட்களின் ஏற்றுமதி சரக்கு அனுமதி வைத்திருப்பவர் அதற்கேற்ப நிர்வகிக்கப்பட வேண்டும்” என்று மாஃபி கூறியது.

சிறப்பு அனுமதியை தவறாகப் பயன்படுத்த பட்டாலோ அல்லது மீறப்பட்டால், துணைப்பிரிவுகள் 11 (2) மற்றும் 11 (3), தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 [சட்டம் 728] ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM100,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது 6 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

“நாட்டில் கோழி விநியோகத்தின் நிலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும், இது படிப்படியாக மீண்டு வருகிறது மற்றும் ஜூன் 2022 முதல் ஸ்திரத்தன்மைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மாஃபி தெரிவித்துள்ளது.


Pengarang :