ECONOMYNATIONALPENDIDIKAN

உலகில் 77 கோடி பேர் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்- யுனெஸ்கோ தகவல்

மாஸ்கோ, ஜூன் 16– உலகம் முழுவதும் சுமார் 77 கோடி பேர் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்களாவர்.

சிறார்களைப் போல் கல்வி கற்கும் உரிமை இல்லாதவர்கள் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத, படிக்கத் தெரியாத அந்த 77 கோடி பெரியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள் என்று யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் அவ்ட்ரே அஸோலாய் கூறினார்.

நேற்று நடைபெற்ற பெரியவர்களுக்கான கல்வி எனும் தலைப்பிலான 7வது அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

படிப்பறிவில்லாத பெரியவர்களுக்கு கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சிகளை அதிகரிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெரியவர்களுக்கான கல்வி எனும் தலைப்பிலான இந்த 7வது அனைத்துலக கருத்தரங்கு மோரோக்கோ தலைநகர் மராக்காஷில் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.


Pengarang :