ECONOMYNATIONALPENDIDIKAN

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு- கோல குபு பாரு சட்டமன்றம் வழங்குகிறது

ஷா ஆலம்,  ஜூன் 17- கடந்தாண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வில்  5ஏ மற்றும் அதற்கு மேல் முடிவுகளைப் பெற்றவர்களுக்கு கோல குபு பாரு  சட்டமன்றத் தொகுதி  ரொக்கப் பரிசுகளை வழங்குகிறது.

தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு  செய்த மாணவர்களைப் பாராட்டும் அதே வேளையில் எதிர்காலத்தில் அவர்கள் மேலும் ஊக்கமுடன் படிக்க  ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வெகுமதி வழங்கப்படுவதாக தொகுதி உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார். கொண்டுள்ளது.

இந்த வெகுமதி வழங்கும் திட்டம் கடந்த 2014 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒன்பதாவது ஆண்டாக தொகுதி  மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கும் நிகழ்வை நடத்துகிறது என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

அத்தேர்வில் 5A  பெற்ற மாணவர்கள் 100 வெள்ளியைப்  பெறுவார்கள். அதைத் தொடர்ந்து வெ.150 (6A), வெ.200 (7A), வெ.250 (8A), வெ.300 (9A), 10A மற்றும் அதற்கும் மேல் பெற்ற மாணவர்களுக்கு வெ.350 வழங்கப்படும் என்றார்.

மாணவர்களின் பெற்றோர்கள் கோல குபு பாரு  தொகுதி வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

தகுதியுள்ள மாணவர்கள் https://forms.gle/GKMMwj8DgUAXWK5S7 என்ற இணைப்பின் மூலம் ஜூன் 30 ஆம் தேதிக்குள் தேர்வுச் சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தகுதி பெற்ற மாணவர்கள்    ஜூலை மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் கெளரவிக்கப்படுவார்கள். மேல் விபரங்களுக்கு தொகுதி சேவை மையத்தை 03-6064 5505 அல்லது 011-19728303 (Ain) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :