ECONOMYHEALTHSELANGOR

நலத் திட்டங்களுக்கு வெ.60 கோடி செலவிட்டாலும் மாநிலத்தின் நிதி நிலை வலுவாகவே உள்ளது

உலு  லங்காட், ஜூன் 20– மக்கள் நலத் திட்டங்களுக்கு 60 கோடி வெள்ளியைச் செலவிட்ட போதிலும் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு வலுவாக அதாவது 300 கோடி வெள்ளியாக உள்ளது.

கோவிட்-19 மற்றும் மோசமான வெள்ளம் ஆகிய பிரச்னைகளை எதிர்கொண்ட போதிலும் இதற்கு முந்தைய மந்திரி புசார்கள் பதிவு செய்த அதே அடைவு நிலை தற்போதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  தெரிவித்தார்.

நாம் ஆண்டுக்கு அறுபது கோடி வெள்ளி வரை செலவிடுகிறோம். வருமானம்  அதிகரிக்கும் போது மக்களுக்காக அதிகம் செலவிடுவோம். நாம் பெருந்தொற்றை எதிர்நோக்கிய போதிலும் மாநிலத்தின் வருமானம் அதிகரித்துள்ளதோடு நிர்ணயித்த இலக்கையும் தாண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் அதிகமாக செலவிட்ட போதிலும் நமது கையிருப்பும் பாதுகாப்பான நிலையில் அதாவது 300 கோடி வெள்ளியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அம்பாங், தாமான் கோசாஸ் திடலில் நேற்று நடைபெற்ற உலு லங்காட் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தில் 20 கோடி வெள்ளியாக இருக்கும் நிதிப் பற்றாக்குறை மாநில அரசுக்கு சுமையை அளிக்காது என்று கடந்தாண்டு நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அமிருடின் கூறியிருந்தார்.


Pengarang :