ECONOMYHEALTHNATIONAL

கடந்த வாரம் புதிய கோவிட்-19 சம்பவங்கள் 27.9 விழுக்காடு அதிகரிப்பு- 21 பேர் மரணம்

கோலாலம்பூர், ஜூன் 20- இம்மாதம் 12 முதல் 18 வயது வரையிலான 24வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 27.9 விழுக்காடு  அதிகரித்து 14,195 ஆகப் பதிவானது.

கடந்த 23ஆவது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 11,096 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அதே சமயம், 24 வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோய் காரணமாக மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 விழுக்காடு குறைந்து 21 ஆனதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 25 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆனானவர்களின் எண்ணிக்கை 35,732 ஆக உயர்வு கண்டுள்ளது என நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

24வது நோய்த் தொற்று வாரத்தில் தீவிரத் தன்மை கொண்ட நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை 9.3 விழுக்காடு உயர்ந்து 24,053 ஆக ஆனதாக கூறிய அவர், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 45 லட்சத்து 38 ஆயிரத்து 922 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார்.


Pengarang :