ECONOMYSELANGOR

ஸ்மார்ட் வாடகைத் திட்டம் அதிகமானோருக்கு வீடுகளை சொந்தமாக்க உதவுகிறது

உலு லங்காட், ஜூன் 20 – 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1,000 வீடுகளை பெற ஏற்பாடாகியுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்த அதிகமான வீடு தேடுபவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்பதால், இந்த எண்ணிக்கை 4,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“2018 ஆம் ஆண்டில், நாங்கள் பிபிஆர் (மக்கள் வீட்டுத் திட்டங்கள்) அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட சுமார் 400 வீடுகளை மட்டுமே வாடகைக்கு விட்டோம், இப்போது கிட்டத்தட்ட 1,000 வீடுகள் வாங்கப்பட்டு சொந்தமாக உள்ளன.

“இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், ஸ்மார்ட் வாடகை திட்டத்தைச் செயல்டுத்த மொத்தம் 4,000 வீடுகளைப் பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் நேற்று அம்பாங்கில் உள்ள தாமான் கோசாஸில் சிலாங்கூர் பென்யாயாங் கண்காட்சியில் கூறினார்.

அமிருடின் கூறுகையில், இதுவரை குத்தகைதாரர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது, அவர்களில் 99 விழுக்காட்டினர் தொடர்ந்து பணத்தைத் திருப்பிச் செலுத்துகின்றனர்.

“இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வாடகையில் 30 விழுக்காடு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தரப்படும், மேலும் நாங்கள் திருப்பிச் செலுத்திய பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்க விரும்புவோருக்கு இது உதவும்,” என்று அவர் கூறினார்.

ரூமா சிலாங்கூர் கூ சொந்தமாக வீடு இல்லாத குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பிரிவினருக்கு தங்கள்  வீடுகளை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பை ஸ்மார்ட் வாடகைத் திட்டம் வழங்குகிறது.


Pengarang :