ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் சாரிங்கின் இலவச சுகாதார பரிசோதனைகள் இந்த வார இறுதியில் மூன்று இடங்களில் நடைபெற உள்ளது

ஷா ஆலம், ஜூன் 22 – மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ பரிசோதனை முயற்சி இந்த வார இறுதியில் கோலா லங்காட் மற்றும் உலு லங்காட்டில் உள்ள மூன்று இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும்.

சிலாங்கூர் பென்யாயாங் ரோட்ஷோவுடன் சிலாங்கூர் சாரிங் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 25) டதாரான் பந்தாய் மோரிப்பில் நடைபெறும் என்று பொது சுகாதாரத்திற்கான மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையில் சிராஸ், கம்போங் பத்து 9 சமூகக் கூடத்திலும்  மற்றும் செமெனியில் உள்ள  தாமான் பெலாங்கி சமூகக் கூடத்திலும் நடைபெறும்.

இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கிளௌகோமா போன்ற நோய்களை கண்டறிவதில் கவனம் செலுத்தும் சிலாங்கூர் சாரிங் திட்டத்தைச் செயல்படுத்த, மாநில அரசால் மொத்தம் RM34 லட்சம் ஒதுக்கியுள்ளது.

டத்தோ ‘ மந்திரி புசார் டத்தோ’ ஶ்ரீ அமிருடின் ஷாரி, இந்தத் திட்டமானது 39,000 சிலாங்கூர் மக்கள், குறிப்பாக அதிக எடை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் நோய் பின்னணிகளை கொண்ட குடும்பங்கள் போன்ற ஆபத்தில் உள்ளவர்கள்,  மற்றும் நோய் குடும்ப வரலாறு கொண்டவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.


Pengarang :