ECONOMYSELANGOR

லோட்டஸ் செத்தியா ஆலமில் சனியன்று நடமாடும் அலுவலகச் சேவை- எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாடு

ஷா ஆலம், ஜூன் 23- ஷா ஆலம் மாநகர் மன்றம் தனது நடமாடும் அலுவலகச் சேவையை வரும் சனிக்கிழமை செக்சன் யு13, லோட்டஸ் செத்தியா ஆலம் கார் நிறுத்துமிடத்தில் மேற்கொள்ளவிருக்கிறது.

ஷா ஆலம் ஒன் வீல்ஸ் எனும் இச்சேவை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றத்துடனான தங்கள் அலுவல்களை பொதுமக்கள் வார இறுதி நாட்களில் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த நடமாடும் அலுவலகச் சேவை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராத த் தொகை சரி பார்த்து செலுத்துவது மற்றும் புகார்களை தெரிவிப்பது உள்ளிட்ட சேவைகள் இங்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நடமாடும் அலுவலகச் சேவையின் வாயிலாக மக்களுக்கு மேலும் ஆக்க கரமான முறையில் சேவையை வழங்க முடியும் என மாநகர் மன்றம் நம்புகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள குற்றப்பதிவுகளுக்கான அபராத த்தை செலுத்துவது உள்பட மாநகர் மன்றத்துடனான அலுவல்களை பொது மக்கள் எளிதாக மேற்கொள்ள வகை செய்யும் இந்த நடமாடும் அலுவலகச் சேவையை தாங்கள் இதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :