ECONOMYSELANGOR

மக்கள் நலத் திட்ட விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜூன் 23– கோல லங்காட், டத்தாரான் மோரிப்பில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் மக்களுக்கு பயன்தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள பெடுலி ராக்யாட் (ஐ.பி.ஆர்.) திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வார்.

அதே சமயம், கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தையும் (பிங்காஸ்) இந்நிகழ்வில் அவர் தொடக்கி வைப்பார்.

இது தவிர சிலாங்கூர் சிறு தொழில்முனைவோர் திட்டம், ஐ-சீட் மற்றும் ஹாலால் சூரி திட்டங்களின் கீழ் வணிகர்களுக்கு வர்த்தக உபகரணங்களையும் அவர் வழங்கவிருக்கிறார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கலந்து கொள்ளும் நிகழ்வில் ஹிஜ்ரா பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும் என்பதோடு ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் மூலம் பேரிடர் நடவடிக்கை அறைகளுக்கு தேவையான பொருள்களும் ஒப்படைக்கப்படும்.


Pengarang :