ECONOMYHEALTHNATIONAL

உலகளாவிய குரங்கம்மை அவசர நிலையைப் பிரகடனப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிசீலனை

ஜெனிவா, ஜூன் 24- ஐரோப்பாவில் குரங்கம்மை நோய் அதிகரித்து வரும் நிலையில் அந்நோயை “உலகளாவிய பொது அவசர நிலையாக“ பிரகடனப்படுத்துவது தொடர்பில் விவாதிக்க உலக சுகாதார நிறுவனம் நேற்று சிறப்புக் கூட்டத்தை தொடக்கியது.

அனைத்துலக அக்கறைக்கான பொது அவசர நிலையாக நடப்புச் சூழலை பிரகடனப்படுத்துவது குறித்து அந்த அவசரக் குழு உலக சுகாதார நிறுவனத் தலைவருக்கு ஆலோசனை கூறும் என்று அனாடோல்யு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குரங்கம்மை நோய் எண்டமிக் எனப்படும் குறுந்தொற்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளோடு குறுந்தொற்றாக பிரகடனப்படுத்தாத நாடுகளிலும் கடந்த மே மாதம் தொடங்கி அந்நோய் வேகமாக பரவி வருகிறது.

ஐரோப்பிய பிராந்தியத்திலுள்ள 29 நாடுகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வரை 2,746 குரங்கம்மை நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

குரங்கம்மை நோயை குறுந்தொற்றாக பிரகடனப்படுத்தியுள்ள மத்திய ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமே இந்நோய் அதிகம் பரவுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

எண்டமிக் மற்றும் எண்டமிக் இல்லாத நாடுகளில் ஏக காலத்தில் குரங்கம்மை நோயை சம்பந்தப்படுத்திய தொற்று மையங்கள் முதன் முறையாக அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


Pengarang :