ECONOMYSELANGOR

தீயணைப்பு குழாய் சிமெண்டினால் மறைப்பு- உணவகம் மீது எம்.பி.எஸ்.ஏ, நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 24- கடையின் நடைபாதைப் பகுதியில் உள்ள தீயணைப்பு குழாயின் ஒரு பகுதியை சிமெண்ட் மூலம் மூடிய உணவகத்திற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் அபராதம் விதித்தது.

இங்குள்ள செக்சன் 13 பகுதியில் உள்ள அந்த உணவகம் நடைபாதை வரை கடையை விரிவுபடுத்தியுள்ளது மாநகர் மன்றத்தின் அமலாக்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்தது.

இந்த சோதனையின் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அதிகாரிகளும் பங்கு கொண்டதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

சம்பந்தப்பட்ட அந்த உணவகத்திற்கு குற்றப்பதிவும் தடைகளை ஏற்படுத்தியது தொடர்பில் 1974 ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் (சட்டம் 133) கீழ் குற்ற அறிக்கையும் வழங்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்தது.

அந்த உணவகம் நடைபாதை வரை செய்த விரிவாக்கப் பணிகள் காரணமாக தீயணைப்பு குழாயின் பாதி அளவு பகுதி சிமெண்டினால் மூடப்பட்டதை சித்தரிக்கும் படங்கள் சமூக ஊடகங்கள் பகிரப்பட்டு வந்தன.

அந்த உணவகத்தின் இந்நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அமலாக்கப் பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களில் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Pengarang :