ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 2,003 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

ஷா ஆலம், ஜூன் 27– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 2,003 பேர் பாதிக்கப்பட்டனர்.

இம்மாதம் 22ஆம் தேதி 2,425 பேரும் 23ஆம் தேதி 2,796 பேரும் 24ஆம் தேதி 2,512 பேரும் 25ஆம் தேதி 2,302 பேரும் இந்நோய்க்கு இலக்கானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 56 ஆயிரத்து 664 பேராக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 28,151 பேர் நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 27,025 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 13 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்திலும் 1,133 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 31 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம் நேற்று பதிவானது. இந்நோய்க்கு இதுவரைப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35,746 ஆக பதிவாகியுள்ளது.


Pengarang :