ECONOMYNATIONAL

ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய் விற்றுத் தீர்ந்தது- 5 கிலோ போத்தல் எண்ணெய் கையிருப்பும் குறைகிறது

ஷா ஆலம், ஜூன் 27- தலைநகரிலுள்ள பெரும்பாலான பேரங்காடிகளில் ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணைய் விற்றுத் தீர்ந்ததோடு ஐந்து கிலோ போத்தல் எண்ணைய் கையிருப்பும் குறைந்து வருகிறது.

சமையல் எண்ணெயின் கையிருப்பு குறைந்து வருவதோடு விநியோகிப்பாளர்களிடம் இருந்து அந்த அத்தியாவசிய உணவு மூலப்பொருள் வந்து சேரவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத பேரங்காடி பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் கொள்முதல் செய்யப்படும் எண்ணெய் வெகு விரைவாக விற்றுத் தீர்ந்து விடும். சிறிதளவு கையிருப்பு மட்டும் எஞ்சியுள்ளது என அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ நாளிதழ் கூறியது.

பாக்கெட் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்  வெகு விரைவாக விற்றுத் தீர்ந்து விடுவதாக ஜஸ்மின் சாங் (வயது 50) என்ற வாடிக்கையாளர் கூறினார்.
இப்பேரங்காடியில் சமையல் எண்ணெயின் கையிருப்பு முற்றாக தீர்ந்து விட்டது. ஆகவே, நான் வேறு கடைகளை நாட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் ரத்து அகற்றும் பட்சத்தில் பெரும்பாலான வணிகர்கள் பாதிக்கப்படுவர் என்பதோடு பொதுமக்களுக்கும் கடுமையான சுமை ஏற்படும் என்று மஹாவி (வயது 60) தெரிவித்தார்.

நான் கரிப்பாப் வாங்க வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றேன். சமையல் எண்ணெய் இல்லாத காரணத்தால் கரிபாப் தயாரிக்க முடியவில்லை என அவர்கள் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன் என அவர் சொன்னார்.


Pengarang :