ECONOMYSELANGOR

மெகா வேலை வாய்ப்பு கார்னிவல் நல்ல வரவேற்பைப் பெற்றது

ஷா ஆலம், ஜூன் 27: ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில்  மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மெகா வேலை வாய்ப்பு கார்னிவல் 2022 இல் கிட்டத்தட்ட 7,000 நபர்கள் கலந்துகொண்டனர்.

இளம் தலைமுறை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் மொத்தம், 280 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வேலைகளைப் பெற்றுள்ளனர்.

“இந்த திட்டத்தின் மூலம் அதிகமான பங்கேற்பாளர்கள் வேலை பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் தரவு இன்னும் பெறப்படவில்லை. தகவல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.

“வேலையின்மை விகிதத்தைக் குறைக்கவும், சமூகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் இது போன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் தொடரும்” என்று முகமது கைருடின் ஓத்மான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த திருவிழாவில் அரசு அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 20,000க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகளை வழங்கின.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் கும்புலான் பெராங்சாங், டைகின் மலேசியா சென்.பெர்ஹாட், டிஎச்எல் எக்ஸ்பிரஸ், டிஆர்பி ஹைக்கோம், ஜயண்ட் மலேசியா, மலாயான் பேங்கிங் பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

மீடியா பிரிமா டிஜிட்டல், புரோட்டோன், பெரசாரானா மலேசியா பெர்ஹாட், ஷோப்பி மலேசியா, ஸ்போர்ட் டைரைக்ட் சென். பெர்ஹாட், டோயோட்டா ஆட்டோ போடி மலேசியா பெர்ஹாட் ஆகியவையும் வேலை வாய்ப்பினை வழங்கும் இதர நிறுவனங்களாகும்.


Pengarang :