ECONOMYSELANGOR

மாநில திறன் மேம்பாட்டு  மையம் 10 படிப்புகளை வழங்குகிறது, எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், ஜூன் 27: சிஜில் பெலஜாரன் மலேசியா (எஸ்பிஎம்) முடித்த மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் (எஸ்திடிசி) மாநில அரசின் உதவித்தொகை மூலம் 10 படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022 அமர்வுகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு திறன் பாடத்திற்கும் 25 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என மாநில திறன் மையம் தெரிவித்துள்ளது.

“மாநில அரசு சிலாங்கூர் ஸ்மார்ட் டெக்னிக்கல் மற்றும் தொழில்முறை திறன் திட்டத்தின் (இக்திசாஸ்) மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகைகளையும் வழங்குகிறது.

ஆர்வமுள்ளவர்கள் www.stdc.edu.my/daftarsekarang.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 0332812616/21 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை  தெரிந்துக் கொள்ளலாம் என பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

வாகன தொழில்நுட்பம், வண்ணம் அடித்தல், மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம், ஏர் கண்டிஷனிங், ஃபேஷன், ஸ்பா தெரபி, சமையல், பேஸ்ட்ரி மற்றும் கணினி அமைப்பு தொழில்நுட்பம் என மொத்தம் 10 திறன் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

எஸ்திடிசி என்பது மாநில அரசு மற்றும் சிலாங்கூரின் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ ஆகியவற்றின் கீழ் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகும்.

ஆகஸ்ட் 2020 இல், கோலா சிலாங்கூரில் அமைந்துள்ள INPENS இன்டர்நேஷனல் கல்லூரி தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை (TVET) வலுப்படுத்த எஸ்திடிசி என மறுபெயரிடப்பட்டது.

Pengarang :