ECONOMYSELANGOR

ஐந்து இடங்களில் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூலை 4– ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு நாளை தொடங்கி மாநிலத்தின் ஐந்து இடங்களில் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக மலிவு விற்பனை நடைபெறும்.

சிஜங்காங் தாமான் பெர்வீராவில் நாளையும் புக்கிட் பெருந்தோங், ஜாலான் கந்தான் 2இல் வரும் ஜூலை 6 ஆம் தேதியும் தஞ்சோங் சிப்பாட், டத்தாரான் பத்து லாவுட்டில் 7 ஆம் தேதியும் தாமான் கோம்பாக் பெர்மாய், ஜாலான் ஜி.பி.3 மற்றும் பண்டான் இண்டா பங்சாபுரி இனாய், டி மற்றும் இ புளோக் பின்புறம் 8ஆம் தேதியும்  இந்த மலிவு விற்பனை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் கோழி 15 வெள்ளி விலையிலும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 12.00 வெள்ளி விலையிலும் சமையல் எண்ணெய் ஒரு கிலோ 2.00 வெள்ளி விலையிலும் இறைச்சி கிலோ 35.00 வெள்ளி விலையிலும் உறைய வைக்கப்பட்ட மீன் ஒரு பாக்கெட் 8.00 வெள்ளி விலையிலும் விற்கப்படும்.

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் இந்த மலிவு விற்பனையில் அரிசி, மாவு, சமையல் எண்ணெய், சீனி உள்ளிட்ட பொருள்களும் விற்கப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

ஒவ்வொரு இடத்திலும் 2,000 கோழிகள் 1,000 தட்டு பி கிரேட் முட்டைகள், 1,700 சமையல்  எண்ணெய் பாக்கெட்டுகள், 1,000 கிலோ இறைச்சி 100 பாக்கெட் உறைய வைக்கப்பட்ட மீன் விற்பனைக்கு வைக்கப்படும்.

இந்த மலிவு விற்பனையில் ஒருவர் ஒவ்வொரு உணவுப் பொருளையும் இரண்டுக்கும் மேல் வாங்க முடியாது என்று விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்  தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது கூறினார்.


Pengarang :