ECONOMYSELANGOR

பாத்தாங் காலி மலிவு விற்பனையில் வெ.36,000 வருமானம் –பி.கே.பி.எஸ் தகவல்

ஷா ஆலம், ஜூலை 7- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பாத்தாங் காலி தொகுதி நிலையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனையில் 39,000 வெள்ளிக்கும் கூடுதலாக வருமானம் பெறப்பட்டது.

நேற்று காலை 9.00 மணி தொடங்கி நான்கு மணி நேரத்திற்கு நீடித்த இந்த விற்பனையின் போது இந்த தொகை வசூலானதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

தொகுதி சேவை மையத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையில் கலந்து கொண்ட சுமார் 700 வருகையாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் உதவித் திட்ட அமலாக்கத்திற்கான பி.கே.பி.எஸ்.சின் தேர்வுக்குரிய இடமாக பாத்தாங் காலி இனி விளங்கும் என்றும் அவர் சொன்னார்.

ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக ஐந்து இடங்களில் இந்த மலிவு விற்பனையை மாநில அரசு மேற்கொள்கிறது.

இந்த மலிவு விற்பனை இன்று தஞ்சோங் சிப்பாட் டத்தாரான் பத்து லாவுட்டிலும் நாளை தாமான் கோம்பாக் பெர்மாய் மற்றும் பண்டான் இன்டாவிலும் நடைபெறும்.


Pengarang :