ECONOMYNATIONAL

கோவிட்-19 அதிகரிப்பை தடுக்க பெருநாள் காலத்தில் எச்சரிக்கையுடன் இருப்பீர்- அமைச்சர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 7- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக வார இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜூப் பெருநாளில் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூடப்பட்ட மற்றும் ஜனநடமாட்டம் மிகுந்த இடங்களில் இருக்கும் போது அவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு த்ரிஸ் எனப்படும் சோதித்தல், தகவல் அளித்தல்,தனிமைப்படுத்துதல், தெரியப்படுத்துதல் மற்றும் சிகிச்சைப் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.

சொந்த ஊர்களுக்குச் செல்லும் முன்னர் சுய கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும்படி தனது டிவிட்டர் பதிவில் அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் கும்பலாக இருப்பது போன்ற காரணங்களால் கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது அதாவது மே மாதம் 12 ஆம் தேதி கோவிட்-19 எண்ணிக்கை 3,410 ஆக உயர்ந்ததாக அவர் தெரிவித்தார்.


Pengarang :