ECONOMYNATIONAL

வேலையில்லாதோர் எண்ணிக்கை மே மாதம் 1.8 விழுக்காடு குறைந்தது

புத்ரா ஜெயா, ஜூலை 7– நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த மே மாதம் 1.8 விழுக்காடு குறைந்து 637,000 பேராக பதிவானது. அதற்கு முந்தைய மாதம் இந்த எண்ணிக்கை 649,000 பேராக இருந்தது.

நாட்டின் ஆள்பலத் துறை கடந்த மே மாதம் 0.2 விழுக்காடு உயர்ந்து 1 கோடியே 64 லட்சத்து 40 பேராக ஆனதாக மலேசிய புள்ளி விபரத் துறை வெளியிட்ட மனித வள அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 1 கோடியே 65 லட்சம் பேராக இருந்ததாக அத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 69.4 விழுக்காடாக இருந்த மனித வளத்துறையில் பங்கேற்பு மே மாதம் 69.5 விழுக்காடாக உயர்வு கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் நாட்டின் பொருளதார நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக இருந்த காரணத்தால் பொருள்கள் மற்றும் சேவைக்கு தேவை ஏற்பட்டது. இதன் மூலம் வணிகர்கள் கூடுதல் வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என அவர் சொன்னார்.


Pengarang :