ECONOMY

 நீர் வழங்கல்  இடையூறு, பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை தூய்மைப் படுத்துவதற்கு  சவாலாக உள்ளது.

ஷா ஆலம், ஜூலை 8: கெடாவின் பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தப்படுத்த 263 சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்கள் எடுத்துக்கொண்ட பணிக்கு  குறைந்த அளவு  நீர் விநியோகம்   பெரிய  சவால்களில்  ஒன்றாக  அமைந்துள்ளது.

சிலாங்கூர் மாநில கவுன்சில் தொண்டர்கள் எதிர்நோக்கும் மற்ற சவால்களில் பெரிய அளவிலான குப்பைகள் மற்றும் சேதமடைந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு குறுகிய பாதைகளும் அடங்கும் என்று தெரிவித்தது.

“குப்பைக் கிடங்குகள் தூரத்தில் இருப்பது, அதாவது 45 நிமிட  பயண நேர தூரத்தில் உள்ளதும் ஒரு சவாலே என்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் , உதவி தேவைப்படுவோரை அணுக திட்டமிடப்படாத குடியிருப்புகள் பெரிய தடங்கலாக  இருப்பதும், அவைகளை அடையாளம் காண தாமதமாவதாக கூறினார்.

“நாங்கள் இரண்டு நாட்கள் சுத்தம் செய்கிறோம், தேவைப்பட்டால் அதை நீட்டிக்க தயாராக இருக்கிறோம்,” என்று இளம் தலைமுறை மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குனர் அகமது பக்ரின் சோபாவி அபு பக்கரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணப் பணியில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 263 உறுப்பினர்கள் திரட்டப் பட்டதாக அவர் கூறினார், மனித மூலதன மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் அவர்களும் இணைந்தார்.

கம்போங் சாடெக், கம்போங் தஞ்சோங் மெர்பாவ், கம்போங் ஜெராய், கம்போங் தஞ்சோங்  குபாங் மற்றும் கம்போங் செபெராங் ஜெயா ஆகிய இடங்களில் சுத்தம் செய்யும் இடங்கள் நாளை நிறைவடையும் என்று அவர் விளக்கினார்.

சிலாங்கூர் பேரிடர் மேலாண்மை பிரிவு செயலாளர் முகமது இக்ராம் ரஹிமி தலைமையில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் சிலாங்கூர் தன்னார்வலர்கள் (சேர்வ்) உறுப்பினர்கள் இணைந்து சிலாங்கூர் பென்யாயாங் மிஷன் கான்வாய் ஏற்பாடு செய்யப்பட்டது.

நான்கு சக்கர வாகனம் (4 × 4), வேன்கள், ரோல் ஓன் ரோல் ஓப் (ரோரோ) லாரிகள் மற்றும் டிப்பர் லாரிகள் உட்பட மொத்தம் 33 இயந்திரங்கள் மற்றும் 112 கருவிகள் உதவி செயல்பாட்டை வெற்றிகரமாக செய்ய கொண்டு வரப்பட்டன.

மற்ற உபகரணங்களில் மரம் வெட்டும் இயந்திரங்கள், தண்ணீர் பீப்பாய்கள், உயர் அழுத்த நீர் பம்புகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் விளக்குகள் ஆகியவை குடியிருப்பாளர்களின் வீடுகளை சுத்தம் செய்யவும், நடைபாதைகளை மீண்டும் திறக்கவும் உதவும் கருவிகள் அடங்கும் என்றார்.


Pengarang :