ECONOMYSELANGOR

ஹாஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 4 மாடுகள், 16 ஆடுகளை பண்டமாரான் தொகுதி வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 11- ஹாஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நான்கு பள்ளிவாசல்கள் மற்றும் எட்டு சூராவ்கள் உள்ளிட்ட 12 சமயத் தலங்களுக்கு பண்டமாரான் தொகுதி தியாக கடமைக்காக கால்நடைகளை வழங்கியது.

நான்கு மாடுகள் மற்றும் 12 ஆடுகள் மாநில அரசு மற்றும் தொகுதி சேவை மையத்தின் வாயிலாக வழங்கப்பட்டதாக பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் லீ கூறினார்.

பலி கொடுப்பதற்கு தேவையான கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தொகுதி சேவை மையம் 16,000 வெள்ளியைச் செலவிட்டது. அதிகமான முஸ்லீம்களுக்கு இறைச்சியை பகிர்ந்தளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

தியாகத் திருநாளில் வழங்கப்படும் உதவியை பகிர்ந்தளிப்பதில் குறைந்த வருமானம் பெறும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி பள்ளிவாசல் மற்றும் சூராவ் நிர்வாகத்தினரை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஹாஜ்ஜுப்  பெருநாளை முன்னிட்டு சுமார் 50 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் 660 மாடுகளும் 1,000 ஆடுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :