ECONOMYHEALTHSELANGOR

மார்பக, பெருங்குடல் புற்றுநோய் சோதனையை விரைந்து  மேற்கொள்வீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 12– சிலாங்கூர் அரசினால் இலவசமாக மேற்கொள்ளப்படும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியின் காரணமாக உருவாகக்கூடிய புற்றுநோய் உள்பட பல்வேறு உடல் உபாதைகளை இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த செல்கள் உடம்பின் வழக்கமான செயல்பாடுகளில் குறுக்கிடும் போது புற்று நோயின் தாக்கம் அதிகரித்து உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று அவர் சொன்னார்.

ஆகவே, சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பங்கேற்பற்கு ஏதுவாக விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு இலவசம் என்பதால் செலங்கா செயலி வாயிலாக பதிவினை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படம் ஒன்றில் இந்த விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பெண்களைப் பொறுத்த வரை மார்பகப் புற்று நோய் (33.9%), பெருங்குடல் புற்றுநோய் (10.7%) மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (8.1%) ஆகிய மூன்று புற்று நோய்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக சித்தி மரியா குறிப்பிட்டார்.

ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் (16.9%), நுரையீரல் புற்றுநோய் (14.0%) மற்றும் புரேஸ்டெட் புற்றுநோய் (8.1%) ஆகியவை முன்னிலையில் உள்ளன என்றார் அவர்.

சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் வரும் 24 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறவுள்ளது.


Pengarang :