ECONOMYSELANGOR

ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனை வழி வெ.230,000 வெள்ளி வருமானம் 

ஷா ஆலம், ஜூலை 14- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட ஏசான் மலிவு விற்பனையின் வழி 230,000 வெள்ளி வருமான ஈட்டப்பட்டது.

மக்களின் சுமையைக் குறைப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதை இந்த மலிவு விற்பனை காட்டுவதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இந்த விற்பனைத் திட்டத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. முதல் நாள் விற்பனையில் 52,000 வெள்ளியும் இரண்டாம் நாள் விற்பனையில் 56,000 வெள்ளியும் மூன்றாம் நாள் விற்பனையில் 46,000 வெள்ளியும் பெறப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இறுதி நாளில் இரு இடங்களில் ஏககாலத்தில் நடத்தப்பட்ட விற்பனையில் 76,000 வெள்ளி வசூலானது. ஒவ்வொரு இடத்திலும் மிகவும் குறுகிய கால அவகாசத்தில் அதாவது மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் இந்த விற்பனை முடிவுக்கு வந்தது என்றார் அவர்.

ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சிஜங்காங், புக்கிட் பெருந்தோங், தஞ்சோங் சிப்பாட், கோம்பாக் மற்றும் பாண்டான் ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெற்றது.


Pengarang :