ECONOMYNATIONAL

கெஅடிலான் தேசிய காங்கிரஸ் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது

ஷா ஆலம், ஜூலை 15: கெஅடிலான் மக்கள் நீதி கட்சியின் 16வது தேசிய மாநாடு இன்று முழு வருகையுடன் தொடங்கி மூன்று நாட்களுக்கு  தனது மாநாட்டைத் நடத்துகிறது.. கோவிட்-19 தொற்றுநோயின் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் செயல்படுத்திய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) 3.0 ஐத் தொடர்ந்து கடந்த ஆண்டு மாநாடு ஒத்திவைக்கப் பட்டது .

இன்று காலை 9 மணிக்கு கெஅடிலான் ஆலோசனைக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் உரையுடன் 16வது ஆண்டு காங்கிரஸ் மகளிர் காங்கிரஸுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து மகளிர் முதல்வர் ஃபுசியா சாலேவின் கொள்கை உரையும் நடைபெற்றது.

இதற்கிடையில், கெஅடிலான் இளைஞர் காங்கிரஸும் (ஏஎம்கே) இன்று கெஅடிலான் பொது செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் அவர்களால் தொடக்கி  வைக்கப்படவுள்ளது, அதைத் தொடர்ந்து அதன் தலைவர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீரின்  கொள்கை உரை  இருக்கும் .

இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஏஎம்கே மற்றும் கெஅடிலான் மகளிர் ஆண்டு மாநாட்டில் 2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உரைக்குப் பிறகு, இரு பிரிவுகளின் மாநாடு அந்தந்த பிரதிநிதிகளின் பிரேரணையின் மீதான விவாத அமர்வுடன் தொடரும்.

தேசிய தலைமைக் குழுவின் (MPP) இடங்களுக்கும், ஏஎம்கே தலைமைக் குழுவுக்கு 20 இடங்களுக்கும், மகளிர் தலைமைக் குழுவுக்கு 20 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும். கெஅடிலானின் 16வது தேசிய மாநாடு எழுச்சி பெறும் கெஅடிலான் என்ற தொனிப்பொருளில் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.


Pengarang :