ECONOMYNATIONAL

15வது பொதுத் தேர்தல்- வேட்பாளர்களை கெஅடிலான் மகளிர் பிரிவு அடையாளம் கண்டது

ஷா ஆலம், ஜூலை 15– வரும் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைக் கொண்ட வேட்பாளர்களை கெஅடிலான் மகளிர் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனைக்காக கட்சியின் தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அப்பிரிவின் தலைவர் பவுசியா சாலே கூறினார்.

மகளிருக்கு குறைந்த பட்சம் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற கட்சியின் அமைப்புச் சட்ட விதியை நாங்கள் உறுதியாக கடைபிடிக்கிறோம். வெறுமனே அந்த 30 விழுக்காட்டு கோட்டாவை நிரப்பாமல் வேட்பாளர்கள் தகுதியானவர்களாக இருப்பதை உறுதி செய்யவும் விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்குவோம். தரமான வேட்பாளர்களை முன்நிறுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 16 மகளிர் பேராளர் மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மொத்தம் 490 பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டை கெஅடிலான் கட்சியின் ஆலோசக மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தொடக்கி வைத்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்த மாநாடு பேராளர்களின் முழு பங்கேற்புடன் மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது.


Pengarang :