ECONOMYNATIONAL

அனைத்து ஊராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய ‘பந்தாஸ்‘ நடவடிக்கை குழு நாளை பாலிங் பயணம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- கெடா மாநிலத்தின் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மிசி சிலாங்கூர் பென்யாயாங் 2.00 திட்டத்தில் இடம் பெற்றுள்ள 12 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய துரித நடவடிக்கை குழுவினர் ( பந்தாஸ்) நாளை அம்மாநிலத்தின் பயணமாகின்றனர்.

இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதை நோக்கமாக கொண்டு இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

அனைத்து ஊராட்சி மன்ற  குழுக்களும் தனித்தனியே பயணம் மேற்கொண்டு பாலிங்கில் ஒன்று கூடி உதவிப் பணிகளை மேற்கொள்வர் என அவர் தெரிவித்தார்.

முதலாவது சிலாங்கூர் பென்யாயாங் உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி மன்றங்களையும் சேர்ந்த 262 உறுப்பினர்கள் பாலிங் அனுப்பப்பட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக உபகரணங்களையும் அவர் உடன் கொண்டுச் சென்றனர் என்றார் அவர்.

அங்கு சுமார் 90 டன் குப்பைகளை இந்த தன்னார்வலர்கள் குழுவினர் அகற்றினர். இந்த உதவி அங்குள்ள மக்களின் சுமையைக் குறைப்பதில் பெரிதும் துணை புரிந்தது என்று அவர் சொன்னார்.

கடந்த 4 ஆம் தேதி பாலிங் வட்டாரத்தில் தொடர்ச்சியாக சுமார் மூன்று மண் நேரத்திற்கு பெய்த மழை காரணமாக சுங்கை குப்பாங் பெருக்கெடுத்து சுற்றுவட்டாரங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்தோடு பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


Pengarang :