ECONOMYNATIONAL

சமையல் எண்ணெய் விலை விரைவில் குறையும்- அமைச்சர் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜூலை 20- போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

டன் ஒன்றுக்கு 7,000 வெள்ளியாக இருந்த கச்சா சமையல் எண்ணெயின் விலை வரை இந்த வாரம் 3,600 வெள்ளியாக இறக்கம் கண்ட காரணத்தால் இந்த விலைக் குறைப்பும் சாத்தியமாகும் என்று அவர் சொன்னார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் ஜிஹாட் சிறப்பு குழுவுடன் நல்கப்படும்  ஒத்துழைப்பின் வாயிலாக பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு குறிப்பாக கோழி மற்றும் முட்டை விலை குறைவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலக்கிடப்பட்ட மானிய உதவித் திட்டத்தின் வாயிலாக அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது, விலையை நிலைப்படுத்துவதற்காக தொழில் துறையினருடன் தொடர்ந்து பேச்சு நடத்துவது, உதவித் தொகை வழங்கப்பட்ட உணவுப் பொருள்கள் முறைகேடாக பயன்படுத்தவதைத் தடுப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் இணைந்து அமலாக்கத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டங்களை தமது தரப்பு  மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள் 613 சட்டமன்றத் தொகுதிகளில் மலேசிய குடும்ப விற்பனையை அறிமுகம் செய்வது மற்றும் பயனீட்டாளர்கள் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை பரிந்துரைப்பது ஆகியவை இதர இரு அம்சங்களாகும் என அவர் சொன்னார்.


Pengarang :