ECONOMYNATIONAL

கடப்பிதழ்களை 90 நாட்களுக்குள் பெற்றுக் கொள்வீர்! தவறினால் அவை அழிக்கப்படும்- அமைச்சர் நினைவுறுத்து

பத்து குராவ், ஜூலை 25 – இணையம் வாயிலாக கடப்பிதழை புதுப்பிக்க விண்ணப்பம் செய்துள்ள மலேசியர்கள் 90 நாட்களுக்குள் அந்த ஆவணங்களை பெற்றுக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த கடப்பிதழ்களை 90 நாட்களுக்கள் பெற்றுக் கொள்ளாவிடில் அவை அழிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

குடிநுழைவுத் துறையின்  அதிகாரத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக  அவர் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் கடப்பிதழ்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர் நோக்குவதை தாங்கள் உணர்ந்துள்ள போதிலும் விண்ணப்பதாரர்களுக்கு கடப்பிதழ்களை அவர்களுக்கு அனுப்புவது குடிநுழைவுத்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்று இங்குள்ள பத்து குரோ, டேவான் அஸ்தாகாவில் ‘கித்தா டெமி நெகாரா’ நிகழ்ச்சியை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இணையம் வாயிலாக புதுப்பிக்கப்பட்ட  2,600 கடப்பிதழ்கள் விண்ணப்பதாரர்களால் இன்னும்  கோரப்படவில்லை என்று குடிநுழைவுத் துறை முன்பு தெரிவித்திருந்தது.


Pengarang :