ECONOMYSELANGOR

மக்களின் நலன் மற்றும்  வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு மாநில அரசு 44 அணுகுமுறைகளை முன்னெடுத்து வருகிறது.

ஷா ஆலாம், ஜூலை 26: இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மாநில அரசு 44 திட்டங்களை வழங்குகிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த அணுகுமுறைகள் அனைத்தும்  இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி) என தொகுக்கப்பட்டு, RM60 கோடிக்கும் அதிகமான ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

“2008 இல் ஏழு திட்டங்களுடன் தொடங்கியது, இப்போது இந்த மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த 44 திட்டங்களை வழங்குகிறது,” என்று அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

இந்த மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 11 புதிய திட்டங்களை உள்ளடக்கிய மக்கள் பராமரிப்பு திட்டத்திற்கு பதிலாக கடந்த மாதம் ஐ.எஸ்.பி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இலவச சுகாதார திட்டமான சிலாங்கூர் சாரிங், இல்திஸாம் அனாக் பென்யாயாங், புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிலாங்கூர் மன ஆரோக்கியம் ஆகியவையும் அடங்கும்.

2008 ஆம் ஆண்டு மாநிலப் பொருளாதாரம் மக்கள் மயம் என்ற கருப்பொருளுடன் ஏழு திட்டங்களுடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, 2017 ஆம் ஆண்டில், 43 நலத் திட்டங்களை உட்படுத்தி, மக்கள் பராமரிப்பு திட்டம் (ஐ.பி.ஆர்) தொடங்கப்பட்டது.

“2019 ஆம் ஆண்டில், மக்களுக்கு அதிக பயனளிக்கும் அம்சங்களுடன்   33  திட்டங்கள்  சீரமைத்தோம். அத்துடன்  மேலும் 11 திட்டங்களை ஐ.எஸ்.பி யில் சேர்த்துள்ளோம்.

எனவே RM 60 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் 44 திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறதுஎன்று ஜூலை 2 அன்று கோலா சிலாங்கூரில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறினார்

கடந்த ஜூன் மாத இறுதியில், 30,000 குடும்பங்கள் பயனடையும் கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்திற்கு பதிலாக, சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் (பிங்காஸ்) தொடங்கப்பட்டது.


Pengarang :