ECONOMYSELANGOR

மலிவு விற்பனைத் திட்டத்தில் இதுவரை 132,000 கோழிகள், 60,000 தட்டு முட்டைகள் விற்பனை

ஷா ஆலம், ஜூலை 26- இவ்வாண்டு பிப்ரவரி முதல் இம்மாத தொடக்கம் வரை மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் 132,000 கோழிகள் விற்கப்பட்டுள்ளன.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இத்திட்டத்தின் கீழ் அக்காலக்கட்டத்தில் 60,000 தட்டு முட்டைகளும் 66,000  சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை மாநிலத்தின் 53 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த மலிவு விற்பனைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நோன்புப் பெருநாளின் போது எட்டு தொகுதிகளிலும் ஹாஜ்ஜூப் பெருநாளின் போது ஐநது தொகுதிகளிலும் இந்த மலிவு விற்பனை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனை என்பது மாநில அரசின் பணி வரம்பிற்கு உட்பட்டதல்ல என் போதிலும் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் ஆற்றல் நமக்கும் உள்ளது என்பதை இந்த திட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளோம் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை பூரோங் உறுப்பினர் டத்தோ சம்சுடின் லியாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :