ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19, குரங்கம்மை நோய் பரவலை சமாளிக்க எம்.சி.ஓ அமல்படுத்தும் சாத்தியமில்லை

கோலாலம்பூர், ஜூலை 27 – நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு மற்றும் குரங்கம்மை நோய் தொற்றுகள் பரவுவதைக் கையாள்வதில் சுகாதார அமைச்சகம் (MOH) நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ ) அல்லது நாட்டின் எல்லை பகுதியில் நுழைவு கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்த சாத்தியமில்லை என தேசிய மீட்பு கவுன்சில் (எம்பிஎன்) தலைவர் டான்ஸ்ரீ முகிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், நாட்டில் கோவிட்-19 மற்றும் குரங்கம்மை நோய் தொற்றுகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாக அவர் கூறினார்.

“சுகாதார அமைச்சகம் முன்பு அளித்த விளக்கத்திலிருந்து, கோவிட் -19 தொற்று நோயை நிர்வகிப்பதில் இரண்டு வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன் அவர்கள் தயாராக உள்ளனர்,” என்று அவர் இன்று 2022 ஆம் ஆண்டிற்கான ஏழாவது எம்.பி.என் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், நாட்டின் சர்வதேச நுழைவுப் புள்ளிகள் உட்பட குரங்கம்மை நோய் தொற்று மீதான கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் பரிந்துரையை எம்.பி.என் ஏற்றுக்கொண்டதாக முகிடின் கூறினார்.

“பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் அல்லாத பயணிகளுக்கு குரங்கம்மை நோயின் அறிகுறிகளைக் கண்காணிக்க நினைவூட்ட ஒவ்வொரு நாளும் சுகாதார பாப்-அப் செய்திகளைப் பெறுவார்கள்,” என்று அவர் கூறினார், மேலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் மலேசியர்கள் தங்கள் உடல்நிலையை 21 நாட்கள் வரை கண்காணிக்க அறிவுறுத்தப் படுவார்கள்.

நேற்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவிப்பைத் தொடர்ந்து தற்போதைய குரங்கம்மை நிலையைப் பற்றி விழிப்புடன் இருக்குமாறு, ஆபத்தில் உள்ள நோயாளிகளிடம் தொற்று கண்டறிதலை அதிகரிக்குமாறும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அனைத்து சுகாதார வசதிகளையும் நினைவுபடுத்தினார்.


Pengarang :