ECONOMYSELANGOR

வறுமை ஒழிப்பு உள்ளிட்ட ஆறு துறைகளுக்கு முதல் சிலாங்கூர் திட்டத்தில் முன்னுரிமை

ஷா ஆலம், ஜூலை 27- முதல் சிலாங்கூர் திட்டத்தின் இரண்டாம் வியூக கருப்பொருளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள ஆறு துறைகளில் வறுமை நிலையை குறைப்பதும் ஒன்றாகும் என்று மந்திரி புசார் கூறினார்.

மக்களின் நல்வாழ்வுக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில்  அந்த ஆறு துறைகளும் கண்டறியப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கவனத்தில் கொள்ளப்பட்ட முதலாவது துறையாக வருமான அதிகரிப்பு மற்றும் சமூக நலன் விளங்குவதாக கூறிய அவர், இரண்டாவது துறையின் கீழ் இளைஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீது கவனம் செலுத்தப்படும் என்றார்.

மகளிர், குடும்பம் மற்றும் சமூகம் மூன்றாவது துறையாகவும் கட்டுப்படி விலை வீடுகள் நான்காவது துறையாகவும் சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி ஐந்தாவது, ஆறாவது துறைகளாக விளங்குகின்றன என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் முதல் சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைத்  தெரிவித்தார்.


Pengarang :