ECONOMYSELANGOR

பி40 மற்றும் எம்40 தரப்பினருக்கு பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்துகிறது

ஷா ஆலம், ஜூலை 27- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு மட்டும் அல்லாமல் நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினருக்காகவும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

ஹிஜ்ரா சிலாங்கூர் சிறுதொழில் கடனுதவித் திட்டம், இருதய சிகிச்சை உதவித் திட்டம், சாரிங் சிலாங்கூர், கட்டுப்படி விலை வீடுகளின் நிர்மாணிப்பு ஆகியவையும் அதில் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அதே சமயம், மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் பி40 தரப்பினருக்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 82,000 பேர் பயன்பெறுகின்றனர். அவர்களில் 40 விழுக்காட்டினர் எம்40 தரப்பினராவர் என்றார் அவர்.

மேலும், ரூமா இடாமான், ரூமா சிலாங்கூர்கூ, ரூமா இடாமான் திட்டங்கள் பி40 தரப்பினரை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. மாறாக, 10,000 வெள்ளி வருமானம் பெறக்கூடிய பி50 தரப்பினருக்கும் அத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அவர் சொன்னார்.


Pengarang :