ECONOMYSELANGOR

கட்டுப்படி விலை வீடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு- கடன் பெறுவதை எளிதாக்க வங்கிகளுடன் பேச்சு

ஷா ஆலம், ஜூலை 27- அதிகமானோர் சொந்த வீட்டைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு மேலும் அதிகமான கட்டுப்படி விலை வீடுகளை நிர்மாணிக்கும்.

ரூமா சிலாங்கூர் கூ, ரூமா இடாமான் மற்றும் ரூமா இடாமான் திட்டங்கள் பொது மக்கள் ஆயிரம் சதுரடி பரப்பளவில் அனைத்து வசதிகளும் கொண்ட வீட்டில் வசிப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சொந்த வீட்டைப் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் சிறப்பான குடும்ப சுபிட்சத்திற்கு உத்தரவாதம் வழங்கும் குடியிருப்பை வழங்குவது ஆகியவையே அவ்விரு இலக்குகளாகும் என அவர் தெரிவித்தார்.

வீடு வாங்குவோர் கடன் பெறுவதில் எதிர்நோக்கும் சிரமத்தை போக்க மாநில அரசு வங்கிகளுடன் பேச்சு நடத்தும். வீடு வாங்குவோர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் முட்டுக்கட்டையை எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

சிலாங்கூர் மக்கள் சொந்த வீடு பெறுவதற்காக சிறப்பு கடனுதவி முறையை அமல்படுத்துவது தொடர்பில் நிதி நிறுவனங்களுடன் குறிப்பாக வங்கிகளுடன் மாநில அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :