ECONOMYSELANGOR

மாநிலம் ஊராட்சி மன்றம் அளவில் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

ஷா ஆலம், ஜூலை 28: நலன், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தை ஊராட்சி மன்றத்தில் மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

2040- க்குள் 13 லட்ச மக்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சம்பந்தப்பட்ட குழுவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இந்த முயற்சி என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“அலுவலகம் மற்றும் வீட்டுக் கட்டிடங்களின் கட்டுமானத் திட்டங்களில் முதியோருக்கான  சிறப்பு வசதிகளான லிஃப்ட் மற்றும் சிறப்பு பாதைகள் மற்றும் சிறப்பு அறைகள் போன்றவற்றைக் கட்டாயமாக்குவது இதில் அடங்கும்.

“இதற்கிடையில், மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) மற்றும் முதியோர் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் சிலாங்கூர் சாரிங் திட்டமும் விரிவுபடுத்தப்படும்,” என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

ஒவ்வொரு உறுப்பினரும் RM100 ஷாப்பிங் பற்றுச் சீட்டு மற்றும் இறப்புத் தொண்டுக்காக RM500 மூலம் பயனடைவதன் மூலம் மாநிலத்தின் முதியோர்களை  சிறபிக்க ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எஸ்.எம்.யு.இ. அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலாங்கூர் 2022 வரவுசெலவுத் திட்டத்திலும் இவ் ஆண்டுத் திட்டத்தின் தொடர்ச்சிக்காக RM 2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :