ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும்

கோலாலம்பூர், ஜூலை 28– நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்க வகை செய்யும் 2022 அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா (எண் 3) மீதான விவாதம் இன்று முடிவுக்கு வந்து அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் இந்த மசோதா மீதான விவாதத்தை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா மக்களவையின் ஒப்புதலைப் பெற மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்த மசோதா மீதான கேள்வி பதில் அங்கம் முடிவுக்கு வந்த நிலையில் அது தொடர்பான விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த மசோதா மீதான விவாதத்தில் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.


Pengarang :