ECONOMYSELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தைக்  கண்காணிக்க செயல்குழு தேவை- எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரை

ஷா ஆலம், ஜூலை 28– முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் அமலாக்கத்தை சரிபார்த்து சமன் செய்வதற்கு ஏதுவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல்குழு மாநிலத்தின் பொருளாதாரத் திட்டங்களை கண்காணிக்கும் அதேவேளையில் அதன் ஆக்கத் தன்மையையும் ஆய்வு செய்யும் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க நான் பரிந்துரைக்கிறேன் என்று சட்டமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களின் அமலாக்கம் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் பணியை அந்த இரு கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு மேற்கொள்ளும். அதேவேளையில் அத்திட்டங்கள் நடப்புத் சூழலுக்கு உகந்தவைதானா என்பதையும் உறுதி செய்யும் என்றார் அவர்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அமலாக்கம் தாமதம் அடைவதை அல்லது கைவிடப்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

மாநில மக்களின் சுபிட்சம் மற்றும் வளப்பத்தைக் கருத்தில் கொண்டு இந்த இந்த பரிந்துரை மீது மாநில மந்திரி புசார் உரிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கிறேன் என ரிஸாம் கூறினார்.


Pengarang :