ECONOMYSELANGOR

கட்சி தாவல் எதிர்ப்பு மசோதா நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பகுத்தறிவு நடவடிக்கையாகும்

அம்பாங், ஜூலை 31: அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா (எண்.3) 2022, பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடை செய்வது, நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான ஒரு பகுத்தறிவு நடவடிக்கையாகும்.

மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நாட்டின் ஸ்திரத்தன்மை அவசியம் என்று சிலாங்கூர் மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) மாநிலத் தலைமைக் குழுவின் (MPN) தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

 “சிலாங்கூரில் நாம் வென்றது போன்று, நாட்டில் நாம் வெற்றி பெற்றால் அம்னோவும் பாரிசான் நேஷனலும் மீண்டும் எழுச்சி அடையாது. அதாவது ஹராப்பான் (பக்காத்தான் ஹராப்பான்) அல்லது வேறு எந்த அரசாங்கமும் வெற்றி பெற்றால், அம்னோவை மீட்பது கடினம், ஏனென்றால் அவர்கள் இனம் மற்றும் மத பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம் மக்களை பிளவுபடுத்தும் பணியில் மட்டுமே உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

கெஅடிலான் இன்  உதவித் தலைவர் மேலும் கூறுகையில், இந்த நாட்களில் அரசியல் மீதான மக்களின் வெறுப்பு  கவலையை தனது  தரப்பு அறிந்திருக்கிறது.

“இருப்பினும், பொது மக்கள் அரசியலை புறக்கணிக்க வேண்டாம், ஏனென்றால் அது ஒடுக்கு முறையாளர்களுக்கு வெற்றியாக அமைந்துவிடும். இறுதியில் அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பது, சிலாங்கூர் மற்றும் மலேசியாவின் பிற பகுதிகளில் உள்ள நம்பிக்கை சீர்திருத்தங்களைத் தொடர்வதில் அது பின்னடைவை ஏற்படுத்தும்.

“இது மாற்றங்களைச் செயல்படுத்தவும், 2020 இல் துரோகத்தால் தாமதமான அனைத்தையும் முடிக்கவும்  உதவும்” என்று அவர் கூறினார்.


Pengarang :