ECONOMYHEALTHSELANGOR

இந்த வார இறுதியில் நான்கு சட்டமன்றங்களில் இலவச சுகாதார பரிசோதனை நடைபெறும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 2: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நான்கு மாநில சட்டமன்றங்களில் நடைபெறும்.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் படி, சனிக்கிழமையன்று செந்தோசா பல்நோக்கு மண்டபம் (செந்தோசா தொகுதி) மற்றும் டேவான் வெண்ணிலா (கோத்தா கெமுனிங் தொகுதி) ஆகிய இடங்களில் சிலாங்கூர் சாரிங் திட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, ஞாயிறு அன்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் ஹால் கெமுனிங் உத்தாமா (சுங்கை கண்டிஸ் தொகுதி) மற்றும் klang Parade கிள்ளான் பரேட் ஷாப்பிங் மாலின் முதல் தளம் (பண்டார் பாரு கிள்ளான் தொகுதி) ஆகிய இடங்களிலும் நடைபெறும்.

ஜூலை 31 அன்று சுங்கை துவா மற்றும் கோம்பாக் செத்தியா மாநில சட்டமன்றங்களில்  நடைபெற்றது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று டாக்டர் சித்தி மரியா மாமூட் விளக்கினார்.

“மாநில அரசின் திட்டத்தின் மூலம் பல்வேறு வயதினரும், இனத்தவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர், இது மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அதிக அக்கறையை பிரதிபலிக்கிறது,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

மாநில அரசு RM15 லட்சம் வெள்ளி செலவில் வழிநடத்தும் இத்திட்டத்தில் 5,000 பேர் பயன்பெற்றுள்ளனர். வறிய நிலையில் உள்ள மக்களுக்கு, நோயின் கடும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு, நாட்பட்ட நோய்களைக் கண்டறியவும் சிலாங்கூர் சாரிங் திட்டம் மிக பயனுள்ளதாக  இருப்பதாக மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்திmமரியா மாமூட் கூறினார்.


Pengarang :