ECONOMYNATIONAL

சொஸ்மா சட்ட வாக்களிப்பு- ஓட்டு எண்ணிக்கையில் திருத்தம்

கோலாலம்பூர், ஆக 3 – சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் 4(5)ஆம் பிரிவு அமலுக்கு வரும் காலத்தை நீட்டிப்பதற்கான பிரேரணையின் மீது  ஜூலை 20 அன்று நடந்த வாக்கெடுப்பின் முடிவை சபாநாயகர் டான்ஸ்ரீ அஸார் அஜிசான் ஹருண் திருத்தினார்.

இந்த திருத்தத்தின் வழி 105 ஆக இருந்த இச்சட்டத்திற்கு ஆதரவளித்தவர்களின் எண்ணிக்கை  104 ஆக குறைந்துள்ளது. வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 32 இல் இருந்து 33 ஆக ஆனது. எது எப்படி இருப்பின்,  எதிர்த்து வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 83 ஆக இருந்தால் வாக்களிப்பு முடிவுகளை இது பாதிக்கவில்லை.

நிரந்தர விதி 100இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டான்ஸ்ரீ அஸார் கூறினார்.

முன்னதாக, ஜூலை 20 மற்றும் 21 ஆகிய  இரண்டு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட பாசீர் சாலாக்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் விவகாரத்தை  கூலாய் உறுப்பினர் தியோ நீ சிங் அவையில் எழுப்பினார். 20ஆம் தேதியன்று தாஜூடின் வாக்களிப்பில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்தும் ஹான்சார்டை அவர் சுட்டிக்காட்டினார்.

உண்மையில், கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். (தொகுதி வாக்கெடுப்பின் போது) ஆனால், இடைநீக்கம் பற்றி துணை சபாநாயகர் டத்தோ முகமட் ரஷித் ஹாஸ்னோன் எனக்குத் தெரிவிக்கவில்லை.  இடைநீக்கம் பற்றி எனக்குத் தெரியாது.

இந்த விஷயம் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால் நிச்சயமாக நான் பாசீர் சாலாக் உறுப்பினரை உள்துறை அமைச்சரின் முன்மொழிவில் வாக்களிக்க அனுமதித்திருக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.


Pengarang :