ECONOMYSELANGOR

பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எட்டு கல்வித் திட்டங்கள்- சிலாங்கூர் அரசு அமல்

ஷா ஆலம், ஆக 4- சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் வாயிலாக பாலர் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலான எட்டு கல்வி உதவித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

டியூஷன் ராக்யாட் மையம், இல்திஸாம் மஹாசிஸ்வா சிலாங்கூர், பெடுலி சிஸ்வா, பந்துவான் செக்கோலா சிலாங்கூர், தொழில்திறன் பயிற்சி மற்று இக்திசாஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் ஆகியவை அந்த எட்டு திட்டங்களில் அடங்கும்.

இது தவிர ஆஸோ பிந்தார், துனாஸ் எனப்படும் ஸ்கிம் பந்துவான் தடிக்கா சிலாங்கூர் திட்டம் மற்றும் செபிந்தாஸ் திட்டம் ஆகியவை அதில் இடம் பெற்றுள்ள இதர திட்டங்களாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பாலர் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலான இந்த உதவித் திட்டங்கள் கல்விக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக ரொக்கத் தொகையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாநில அரசின் இத்திட்டங்கள் மற்றும் அதற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழி முறைகள் மாநில மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அமிருடின் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை  மாதம் 31 ஆம் தேதி பத்து கேவ்சில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் இந்த கல்வி உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :