ECONOMYPENDIDIKANSELANGOR

இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கு இல்திஸாம் அனாக் சிலாங்கூர் திட்டத்தின் வழி 500 வெள்ளி சேமிப்பு நிதி

ஷா ஆலம், ஆக 5- இவ்வாண்டில் பிறந்த குழந்தைகளுக்கு இல்திஸாம் அனாக் சிலாங்கூர் திட்டத்தின் வழி மாதம் 100 வெள்ளி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு சேமிப்புத் தொகையைப் பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் திட்டத்திற்கு மாற்றாக 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழி 30,000 குழந்தைகள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தேசிய கல்வி சேமிப்பு நிதித் திட்டம் மற்றும் பி.டி.பி.டி.என் எனப்படும் தேசிய உயர்கல்விக் கடனுதவிக் கழகம் ஆகியவற்றில் சேமிப்பு கணக்கு திறக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவர். சேமிப்புக் கணக்கில் 1,000 வெள்ளி சேர்ந்தவுடன் அச்சிறார்களுக்கு தக்காஃபுல் காப்புறுதி மற்றும் மரண சகாய நிதி ஆகிய அனுகூலங்கள் வழங்கப்படும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பம் இம்மாதம் 1 ஆம் தேதி தொடங்கி anak.yawas.com.my  என்ற அகப்பக்கம் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :