ECONOMYSELANGOR

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது போல் RM100 ஹலால் பற்றுச்சீட்டு திட்டம் 

ஷா ஆலம், ஆகஸ்ட் 4: RM100 மதிப்புள்ள ஹலால் பற்றுச் சீட்டுகளை வழங்குவது என்பது ஹலால் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான தனது நிகழ்ச்சி நிரல் மாநில அரசின் ‘மும்முனை மேம்பாட்டு திட்டமாகும்  என்றார்  ஹலால் நுகர்வோர் மற்றும் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி.

 இந்த ஊக்கத் தொகையானது ஹலால் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க அவர்களை ஊக்குவிப்பதோடு, தயாரிப்புகளை விற்கவும்,  மிக முக்கியமாக  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளில் உள்ளவர்களுக்கு  உதவுவதுமாகும்.

“ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் இந்த மாத இறுதியில் 50 பற்றுச் சீட்டுகளைப் பெறும், அவற்றை விநியோகிப்பது அவர்களின் விருப்பப்படி உள்ளது, ஆனால் இதுவரை மாநில அரசாங்க உதவி கிடைக்காத  நபர்களுக்கு வழங்குவது ஊக்குவிக்கப்படுகிறது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தனக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால், எதிர்காலத்தில் பற்றுச் சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜவாவி மேலும் கூறினார்.

ஜூலை 28 அன்று, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, 56 சட்டமன்றங்களில் உள்ள 2,800 ஆதரவற்ற குடியிருப்பாளர்களுக்கு RM100 மதிப்புள்ள ஹலால் பற்றுச் சீட்டுகளை வழங்குவதைத் தொடங்கினார்.

பற்றுச் சீட்டுகளை சிலாங்கூர் ஹிஜ்ரா குடிமக்கள் கூட்டுறவு (கோஹிஜ்ரா), மைடின், அஸ்சைன்மார்ட் பெனராஜ் ஹலால் கடை மற்றும் 99 ஸ்பீட் மார்ட் ஆகியவற்றில் ஒரு பரிவர்த்தனை மட்டுமே அனுமதிக்கப்படும்.


Pengarang :