ECONOMYSELANGOR

எம்.பி.ஏ.ஜே. ஏற்பாட்டில் 3 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி – ஞாயிறன்று நடைபெறும்

ஷா ஆலம், ஆக 9- ஆகஸ்டு மாதத்திற்கான வாகனமில்லா தினத்தை முன்னிட்டு மூன்று கிலோ மீட்டர் நடைப்பயிற்சி நிகழ்வை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வுக்கான பதிவு நடவடிக்கை அம்பாங், பாண்டான் இண்டா நகராண்மைக் கழக திடலில் காலை 7.30 மணி முதல் நடைபெறும் என்று நகராண்மைக் கழகம் கூறியது.

இந்த நடைப்பயணத்திற்கு பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு டி-சட்டைகள் இலவசமாக வழங்கப்படும்.

மேல் விபரங்களுக்கு https://wasap.my/60183184932 என்ற அகப்பக்கம் வாயிலாக கூ அரிபின் என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

 


Pengarang :