ECONOMYHEALTHNATIONAL

ஒமிக்ரோன் BA.5 துணை உருமாறியத் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – அமைச்சர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 10: மலேசியாவில் ஒமிக்ரோன் BA.5 துணை உருமாறிய கோவிட் -19 தொற்று அலை சிறியதாகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

சில நாடுகளில் ஒமிக்ரோன் BA.5 மிக வேகமாக பரவினாலும் மலேசியாவில் அலைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.

“நான் சொன்னது போல், 2,000 முதல் 5,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அது திடீரென்று உயரவில்லை, சிறிது சிறிதாகப் பதிவாகி, தற்போதைய நிலைக்கு எட்டியுள்ளது,” என்று ஷா ஆலமில், மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா, தேசிய சுகாதார நிறுவனத்தை தொடக்கி வைத்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கைரி அவ்வாறு கூறினார்.

மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்யப்படாத கோவிட்-19 தொற்று குறித்து கருத்து தெரிவித்த கைரி, மலேசியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இப்படி நடப்பதுண்டு என்றார்.

சமூகத்தில் உள்ள உண்மை நிலவரம் மற்றும் சம்பவங்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் அறிய உதவும் வகையில், மைசெஜாத்ரா செயலியில் கோவிட்-19 தொற்றுகள் குறித்துப் புகாரளிக்குமாறு கைரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


Pengarang :