ECONOMYNATIONAL

ஜாலூர் ஜெமிலாங் பிரச்சாரம் தொடங்கப்பட்டு, மாநில அளவில் தேசிய தின சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 10: மாநிலத்தின் 65 வது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்து தேசபக்தியின் உணர்வைத் தூண்டும் வகையில் ஜாலூர் ஜெமிலாங் மற்றும் சிலாங்கூர் கொடிகளை பறக்கவிட அனைத்துக் மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், குடியிருப்புகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் சமச்சீர் விகிதத்துடன் கொடி ஏற்றப்பட வேண்டும் என மாநிலச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

“அரசு, தனியார் மற்றும் தனிப்பட்ட வளாகங்கள் அனைத்தும் கட்டிடத்தை பிரகாசமாக்குவதையும், இரவில் விளக்குகள் பொருத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை அழகுபடுத்துவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“மாநில அளவிலான சுதந்திரக் கொண்டாட்ட சின்னம் மற்றும் கருப்பொருள் ஆகியவற்றை https://www.selangor.gov.my/index.php/pages/view/5327 வழியாக ஒரு வழிகாட்டியாக பதிவிறக்கம் செய்யலாம்” என்று டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.


Pengarang :